காசா முனையிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் தீப்பற்றி எரியக்கூடிய பலூன்களின் மூலம் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் விமானப்படையினர் அதிரடியான வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இஸ்ரேலுக்கும் அந்நாட்டால் பயங்கரவாத இயக்கமாக கருதப்படும் காசா முனையை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்குமிடையை தொடர்ந்து பல வருடங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் நாட்டினுடைய வடக்குப் பகுதியை குறிவைத்து தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். அதாவது பாலஸ்தீனர்கள் பலூன் முழுவதும் […]
