பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் டல்ஹாவை தீவிரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல்கள் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொடூரமாக கொன்று குவித்தனர். அந்த 9 தீவிரவாதிகளும் நமது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதியை மட்டும் உயிருடன் பிடித்து தண்டனையாக தூக்கில் […]
