அமெரிக்க மாகாணத்தில் ஏற்பட்டுள்ள ஹன்னா புயலால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற பயங்கர புயல் தாக்கியுள்ளது. அட்லாண்டிக் கடலில் உருவான இத்தகைய புயல் தெற்கு டெக்சாசின் பாட்ரே தீவை நேற்று முன்தினம் மாலை கடுமையாக தாக்கியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றால், அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான […]
