ஜம்மு-காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை […]
