போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பொழுது இளைஞன் லேசர் லைட்டை கண்ணில் அடித்ததால் பார்வையை இழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் உள்ள சூரிச் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட லேசர் துப்பாக்கியை கொண்டு இளைஞர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியின் கண்ணில் தாக்கியுள்ளார். அந்த அதிகாரி பார்வை இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஒரு வீட்டின் முன் இரண்டு இளைஞர்கள் இருந்தனர். திடீரென ஒரு இளைஞர் லேசர் துப்பாக்கியை உபயோகித்த போலீஸ் அதிகாரிகளை குறி வைத்துள்ளார். […]
