கொரோனா கால பொதுமுடக்கத்தில் தங்கள் சேவை குறித்த அறிக்கையை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கின்றனர். வீட்டில் தங்கியிருக்கும் பலரும் ஸ்விகி மூலமாக ஆர்டர் செய்து உணவுகளை வாங்கியுள்ளனர் என்று ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணிகள் பதிவு செய்ததாக […]
