சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி, ஜடேஜாவை போல் ஸ்வார்ட் செலிப்ரேஷன் செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. சிஎஸ்கே அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா திகழ்ந்து வருகிறார். அதோடு இந்திய அணியிலும் முன்னணி ஆல்ரவுண்டராகவும் விளங்குகிறார் . இவர் சர்வதேச போட்டி மற்றும் ஐபில் போட்டிகளில் , பேட்டிங்கில் களமிறங்கும் போது அரை சதம் அல்லது சதமடித்து முடித்தால் தனது வெற்றியை கொண்டாடுவதற்கு, பேட்டை வால் போல் சுழற்றுவதை வழக்கமாக ஒன்றாக வைத்துள்ளார். […]
