பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலை முதல் தற்போது வரை மிகப் பெரிய பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான கோகுல்ராஜ் என்பவருடைய காதலி தோழி என்று கருதப்பட்ட சுவாதி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காலையில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏனென்றால் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக […]
