ஸ்வாட் ஏர்லிட் 004 ட்ரூ வயர்லெஸ் இயர் பட்ஸ் வெளியீட்டை அடுத்து புதியதாக நெக்பேண்ட் ரக இயர்போனை ஸ்வாட் நிறுவனமானது அறிமுகம் செய்துள்ளது. புது நெக்பேண்ட் இயர்போன் ஸ்வாட் நெக்கான் 101 என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.599 ஆகும். இந்த நெக்பேண்ட் இயர்போன் ஊதா, கறுப்பு ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் ஹெச்டி ஸ்டீரியோ சவுண்ட் அளிக்கிறது. இவற்றில் உள்ள மென்மையான சிலிகான் காதுகளில் எந்த வித எரிச்சலையும் ஏற்படுத்தாது என்பது கவனிக்கத்தக்கது. […]
