உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிவ் நகரத்திற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் தலைநகரில் ரஷ்ய படைகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய படையினர், தலைநகர் கீவை குண்டுவெடிப்பு தாக்குதல்களால் அதிர வைத்து வருகிறார்கள். அந்நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவெடிப்பு தாக்குதல்களால் பெரும் சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இருக்கும் சுலோவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளின் பிரதமர்கள் உக்ரைனிற்கு நேற்று […]
