தாமிரபரணி ஆற்றின் ஓரம் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதி முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். நவ திருப்பதி பெருமாள் கோவில்கள், நவகைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் சிவன் கோவில் ஆகிய ஆன்மீக தலங்களும் இங்கு உள்ளன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும் தொகுதியை கைப்பற்றி உள்ளனர். தற்போது அதிமுகவின் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவாக உள்ளார்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,23,764 […]
