அரசு தொடக்கப் பள்ளிகளிலுள்ள அனைத்து வகுப்பறைகளையும் ஸ்மார்ட்வகுப்பறைகளாக மாற்ற புதுச்சேரி அரசு திட்டமிட்டு இருக்கிறது. ஆரம்பப்பள்ளிகளில் ஆடியோ, காட்சிசாதனங்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் புரொஜெக்டர்கள் போன்றவற்றுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டங்களை வகுத்து உள்ளனர். அதன்படி முதற்கட்டமாக 200 தொடக்கப்பள்ளிகள் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். அதில் ஒவ்வொரு வகுப்பறையையும் மாற்ற சுமார் 1.5 முதல் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இதற்குரிய பணம் சமக்ரா சிக்ஷா அபியான் வாயிலாக பெறப்படும் எனவும் புதுச்சேரி கல்வித் […]
