தமிழகம் முழுவதும் நேற்று அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கரூர் புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எடப்பாடியார் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஓ பன்னீர்செல்வம் திமுகவுடன் கைகோர்த்து செயல்படுகிறார். நீதிமன்றம் சென்று எப்படியாவது கட்சி தலைமை பதிவை பிடித்து விட வேண்டும் என்று ஆசையில் இருக்கிறார். […]
