சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 15ஆவது பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அவர், பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள் திமுக என்னும் கல்கோட்டை மீது கல் வீசினால் அது செய்தமடையாது மாறாக மேலும் வலுதான் பெறும். கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதை கவனத்தில் கொண்டு திமுக நிர்வாகிகள் அனைவரும் […]
