இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனோ வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் புதியதாக மற்றுமொறு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்று பிரிட்டனின் சுகாதார செயலர் போட் மண்ட் ஹான்காக் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமின்றி வேல்ஸ்,ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் பிரிட்டனுக்கு வெளியே உள்ள ஆஸ்திரேலியா டென்மார்க் பகுதிகளிலும் அதே வகையான புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]
