ஸ்கூட்டரில் 5 அடி பாம்பு நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் திருநீலகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தியிருந்தார். அப்போது பாம்பு ஒன்று வேகமாக சென்று ஸ்கூட்டருக்குள் நுழைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த திருநீலகண்டன் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஸ்கூட்டரில் நுழைந்த பாம்பை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினர் […]
