டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் ஷ்ரத்தாவின் காதலர் அப்தாப்பை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதன் பிறகு அப்தாப் கொடுத்த தகவலின் பேரில் டெல்லி முழுவதும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 13 எலும்பு துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எலும்பு துண்டுகள் ஷ்ரத்தாவின் எலும்புகளா என்பதை ஆய்வு […]
