மூன்று நாள் பயணமாக டெல்லி வந்துள்ள நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியில் நேபாளத்தை இணைப்பது உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா – நேபாளம் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பீகாரின் ஜெய் நகரில் இருந்து நேபாளம் குர்தா வரையில் […]
