நியூசிலாந்து அணி டாஸ் வென்றால் முதலில் பவுலிங் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் கூறியுள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டி இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை கைப்பற்றும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெறும் அணிதான் 2 […]
