மரியுபோல் நகரத்தின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை குறிவைத்த ரஷ்யப்படை அங்கு ஷெல் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரத்தின் பெரும்பகுதியை ரஷ்யப்படை கைப்பற்றிவிட்டது. எனினும், அந்தப் பகுதியில் இருக்கும் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலை மட்டும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அங்கு 2000 உக்ரைன் வீரர்களும் ஆயிரம் மக்களும் சுரங்கங்களின் கீழ் பகுதியில் பல நாட்களாக மறைந்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்த ஆலையையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்ய படையினர் ஷெல் தாக்குதலில் மேற்கொண்டிருக்கிறார்கள். […]
