தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் முகத்தை மறைக்கும் ஷீல்டு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவி வரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக போலீசாரின் முழு முகத்தையும் மறைக்கும் ஷீல்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலீசார், முகத்தை மறைக்கும் ஷீல்டு பயன்படுத்துவதை மாவட்ட எஸ்.பிக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் கொரோனா தொற்று காலத்தில் களத்தில் இறங்கி பணியாற்றும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப்பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், வருவாய் […]
