கோவையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர ரயில் சேவை, விரைவில் தொடங்கப்படவுள்ளது. கோவையிலிருந்து தனியாரால் இயக்கப்படும் முதல் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஷீர்டியிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆண்டு முழுவதும் ஆன்மிகச் சுற்றுலா செல்கின்றனர். பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஷீரடிக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி போக்குவரத்து வசதியில்லை. விமானம் மற்றும் ரயில்களில் மாறிச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்நிலையில் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு பல்வேறு […]
