பின்னணி பாடகி , நடிகை என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்று அழகாக பாடி அசத்தினார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். […]
