கேரளாவில் ஷவர்மாவை தயாரிக்க உரிமமில்லை எனில் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஷவர்மா தயாரிப்பது குறித்த வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டு இருக்கிறது. அவற்றில் ஷவர்மா தயாரிக்க உரிமம்பெற தவறினால் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதுடன், 6 மாதங்கள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஷவர்மாவை திறந்த சூழலில் தயாரிக்ககூடாது எனவும் 4 மணிநேரம் கழித்து ஷவர்மாவில் மீதம் உள்ள இறைச்சியை பயன்படுத்த வேண்டாம் எனவும் […]
