கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்ட ஒருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தியதாக கூறி பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் ஒருவருக்கு ஷவர்மா சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
