மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியரான ஷரத்தா சென்ற மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஷரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷரத்தாவை காணவில்லை என்று அவரது தந்தை புகாரளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் காவல்துறையினர், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். அதன்பின் கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி […]
