பாகிஸ்தான் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான்கான் ஆட்சியே காரணம் என குற்றம்சாட்டி எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான்கான் தோல்வியடைந்து, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் புது பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப் (70) போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் புது அமைச்சரவையை அமைக்கும் பணிகளில் அவர் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்.என்) […]
