முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபடியான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 1ஆம் தேதி தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. இந்நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை நடைபெற்ற ஏலத்தின் ஒதுக்கீடு விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஒட்டுமொத்தமாக 77,815 கோடி கிடைத்துள்ளது. ஒதுக்கீட்டின்படி முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 57122.65 கோடி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்கியுள்ளது. இரண்டாவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் […]
