விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, ஷெரினா, அசல், விஜே மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் அரண்மனையும் அருங்காட்சியகம் டாஸ்க் கொடுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் ராஜா, மந்திரி, ராணி என விதவிதமான கெட்டப்பில் இருந்தனர். இந்த டாஸ்கின் போது படைத்தளபதியாக இருந்த அசீம் ராஜகுருவாக இருந்த விக்கிரமனை பார்த்து […]
