மின்கம்பியில் உரசி வைக்கோல் லோடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தம்பிபட்டி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக வைக்கோல் மின்கம்பி மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கவனிக்காமல் மினி லாரி ஓட்டுனர் வாகனத்தை இயக்கி வந்துள்ளார். இதனை பார்த்தார் பொதுமக்கள் லாரி ஓட்டுனரிடம் தீப்பிடித்து எரிவதை […]
