நேற்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தமிழக மக்கள் சமூகநீதியை காக்கும் வகையில் திமுகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இந்தியாவே புகழ்ந்து பேசும் வகையில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தின் மூலம் நீக்கியுள்ளார். அதேபோல் தமிழ்தாய் வாழ்த்து, கோவில் நிலம் மீட்பு என […]
