தி ஃபேமிலி மேன் 2 ஹிந்தி தொடரை ஒளிபரப்ப தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ வலியுறுத்தி உள்ளார். ஃபேமிலி மேன் இணைய தொடரின் இரண்டாம் பாகம் தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஃபேமிலி மேன் 2 அகைன்ஸ்ட்டு தமிழ்ஸ் என்கிற ஹேர்ஸ் டேக்கில் இந்த இணைய தொடருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமந்தா தமிழர்களுக்கு எதிரான இந்த தொடரில் நடித்து இருக்கக் கூடாது எனவும் பதிவிட்டு […]
