வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கன மழையும்,சில இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன அவற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. […]
