நாடு முழுவதும் தற்போது இணையதள சேவை பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. செல்போனில் இணைய வசதியை பெறுவதால் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மறுப்புக்கம் நகர்ப்புறங்களில் இணைய சேவையை பெருமளவிற்கு கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இணைய சேவை சரியாக கிடைப்பதில்லை. எனவே இந்த குறைபாட்டை தீர்க்கும் வகையில் கிராமப்புறங்களிலும் எளிதாக இணைய சேவையை “வைஃபை”மூலம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அரசு கொண்டு வந்தது. […]
