விவசாயம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான். இந்த விவசாய நிலத்தை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது மண் வகை, மழை அளவு, பாசன வசதி, பயிர்சாகுபடி, இதர பௌதீக, […]
