நாடாளுமன்ற மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே இன்றுடன் நிறைவுபெற்று அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி அன்று தொடங்குகிறது. 10 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ள கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும். 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே புதிய வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் […]
