கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2021-2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையின் விண்ணப்பங்களானது கடந்த வருடம் செப்டம்பர் முதல் பெறப்பட்டது. அப்போது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில் இளம் அறிவியல் பட்டப்படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலானது கடந்த மாதம் […]
