“விவசாயப் பெருங்குடி மக்களுக்காக எதையும் சந்திக்க தயார்” என உண்ணாநிலை போராட்ட நிறைவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்திய போராட்டத்தில் நிறைவுற ஆற்றிய ஸ்டாலின், இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியபோதே நான் எனது உரையை ஆற்றி விட்டேன். ஏற்கனவே காலம் கடந்து கொண்டு போகிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரை தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை […]
