மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும், இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் பீகார் முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதின் குமார் நேற்று டெல்லியில் பிரதமரை சந்தித்து பேசினார். […]
