ஒரு வருடம் தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்றுகையிட்டு வந்த விவசாயிகள் இறுதியாக தங்களுடைய போராட்டத்தை விலக்கிக் கொள்கிறார்கள்.. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் பிறகு அந்த சட்டங்கள் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதேபோல நாடாளுமன்றத்திலும் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த […]
