பயிர்கடன் மற்றும் நகைகடன் தள்ளுபடி செய்ததற்கான அரசாணை வெளியிட வலியுறுத்தி விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தில் சுமார் 2,700க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் பயிர்கடனும், 150க்கும் மேற்பட்டவர்கள் நகைகடனும் பெற்றிருந்துள்ளனர். இதனையடுத்து அதிமுக அரசு அந்த கடன்களை தள்ளுபடி செய்து அரசாணையை வெளியிட்டது. இந்நிலையில் […]
