பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை அதிகாரிகள் உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் திடீரென்று உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை நிலையங்களில் உரங்களை விவசாயிகளுக்கு உரிய ரசீதுடன் விற்பனை முனைய கருவி மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி மட்டுமே விற்பனை […]
