தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து வருகிறார்கள். இவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பாகவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீட்டுத்தோட்டம் சிறுதானிய உணவுகள் தொடர்பான பயிற்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் மையம் சார்பில் அளிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தில் 25ஆம் தேதி வீட்டுத்தோட்டம் குறித்தும், 26 ஆம் தேதி சிறுதானிய உணவுகள் குறித்தும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப் படுகின்றன. தினை அரிசி பாயசம், தினை உருண்டை, சிறுதானிய அடை, […]
