வேளாண் வருவாயை அதிகரிப்பதற்கு அரசாங்கமும், விவசாய சங்க தலைவர்களும் வேறு வழியை யோசிக்க வேண்டும் என்று நிபுணர் குழு உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகும் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை திரும்பப் பெறாமல், பல்வேறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதில் குறிப்பாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் அரசு என்ன முடிவு […]
