நாகபட்டினம் வேளாங்கண்ணியில் சுற்றுலாவிற்கு வந்தவர்களில் 2 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் சிலம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மனைவியும், பரத் என்ற மகனும் உள்ளனர். சண்முகம் அவருடைய உறவினர் மகன் தீபக் மற்றும் அப்பகுதியில் வசித்து வரும் 12 பேரையும் அழைத்துக்கொண்டு நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளார். […]
