படித்து முடித்து வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் அரசு வழங்கும் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் படித்த வேலைவாய்ப்பற்றோர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் […]
