திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி மையம் சார்பாக நெல்லை மாவட்டத்தில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 85 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் இதில் கலந்து கொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது கோவையில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் 30 ஆயிரம் கோடிக்கு […]
