இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, அரசு ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அதனையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி இன்றைய தினம் அவர்களை புனித ஜார்ஜ் கோட்டையில் அழைத்து பேசிய பொழுது அவர்கள் பக்கத்தில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். அவர்கள் தரப்பில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். அந்தக் கருத்து அவர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சங்கங்களுடன் […]
