சிறைச்சாலையில் உள்ள கைதிகள் உறவினர்களுடன் வீடியோகால் மூலம் பேசுவதற்கு வசதி வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறைச்சாலை மற்றும் பெண்கள் தனிச்சிறை இருக்கின்றது. இந்த சிறைச்சாலைகளில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் பெரும்பாலானோர் இருக்கின்றனர். எனவே கொரோனா தொற்று பரவலின் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கைதிகள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசுவதற்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]
