கந்து வட்டி கேட்டு மிரட்டிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி ரோடு காந்தி நகர் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஊழியராக இருக்கின்றார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அப்போது கடனுக்காக பெற்றுப் பத்திரங்களில் அசோக்குமாரிடம், அஜய் கையெழுத்து வாங்கியதாக தெரிகின்றது. […]
